New Updates! Fresh news just arrived.

இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி

News

இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி

November 9, 2026 7:45 am
இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி
எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில், பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து விசாரணை நடத்துமாறும், அலட்சியமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

எகிப்திய செம்பிறை சங்கம், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளையும் மனரீதியான ஆதரவையும் வழங்கி வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு ரயிலின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு எகிப்தில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now