New Updates! Fresh news just arrived.

நாட்டை வந்தடைந்துள்ள 7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு ...

News

நாட்டை வந்தடைந்துள்ள 7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு கப்பல்!

April 6, 2026 6:26 pm
நாட்டை வந்தடைந்துள்ள 7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு கப்பல்!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7,000 மெட்ரிக் தொன் எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு கையிருப்பைக் கொண்ட 'எண்டோவர்' (ANDOVER) கப்பல் ஹம்பாந்தோட்டை லாஃப்ஸ் முனையத்தை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எரிவாயு சிலிண்டர்களை நிரப்புதல் மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் வினைத்திறனான முறையில் எரிவாயுவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு கையிருப்பு, உலகில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோகஸ்தரான நெதர்லாந்தின் 'SHV Energy' நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now