நாடு தழுவிய தேசிய நடவடிக்கையில் 738 பேர் கைது!
News

நாடு தழுவிய தேசிய நடவடிக்கையின் கீழ் கடந்த ஒரு நாளில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 738 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனைகளின் போது, 2 கிலோகிராம் 675 கிராம் ஹெராயின், 25 கிலோகிராம் 483 கிராம் ஐஸ், மற்றும் 1 கிலோகிராம் 816 கிராம் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு, நான்கு சந்தேக நபர்கள் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் 7 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையில், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கையின் கீழ் கடந்த ஒரு நாளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்று 27,415 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 112 குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 136 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.