New Updates! Fresh news just arrived.

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

News

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

August 11, 2026 6:29 am
கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
கொலம்பியாவின் மேற்கு பகுதியில் நேற்று (10) காலை சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி குறித்து USGS வெளியிட்ட தகவலின்படி, சான் ஜோஸ் டெல் பால்மர் இதன் மையப்புள்ளியாக இருந்துள்ளது. இந்த இடம் போகொடாவிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன், அதன் மையம் பூமிக்கு அடியில் 107 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஃகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோவில் சிலர் காயமடைந்துள்ளதுடன், கட்டிடங்களுக்கும் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பிராந்திய ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா கூரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பிந்தைய அதிர்வுகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, தலைநகர் போகொடாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு தீவிரமாக உணரப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பலர் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய கட்டமைப்பு சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என போகொடா மேயர் கார்ட்லோஸ் கெலன் தெரிவித்துள்ளார். சில கட்டிடங்களில் சிறியளவிலான விரிசல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now