பொரலஸ்கமுவில் துப்பாக்கிச் சூட்டில் 74 வயது நபர் பலி! - G...
News
பொரலஸ்கமுவில் துப்பாக்கிச் சூட்டில் 74 வயது நபர் பலி!
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த நபரை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைத்துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்ட பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களின் அடையாளம் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.