New Updates! Fresh news just arrived.

பல குற்றங்களில் சந்தேக நபரான ஹல் சமீர ஆயுதங்களுடன் கைது! ...

News

பல குற்றங்களில் சந்தேக நபரான ஹல் சமீர ஆயுதங்களுடன் கைது!

August 23, 2022 5:19 am
பல குற்றங்களில் சந்தேக நபரான ஹல் சமீர ஆயுதங்களுடன் கைது!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான வர்ணகுலசூரிய கிறிஸ்டெபுகே சமீர சம்பத் பெர்னாண்டோ என்றழைக்கப்படும் ஹல் சமீர விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கொடுவ, பட்டதுவன, மினுவாங்கொடை ஆகிய இடத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





மேலும் வீட்டில் சோதனை நடத்தியதில் ஏராளமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.





இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 02 ரிவால்வர்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி, மி.மீ. 09 ரகத்தின் 10 தோட்டாக்கள், 0.38 விசேட ரகத்தின் 02 தோட்டாக்கள், 12 ரக ரக 11 தோட்டாக்கள் மற்றும் பயன்படுத்த தடைசெய்யப்பட்ட வாள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





இவரும் அரிசி உற்பத்தியாளர்களிடம் பாரியளவில் அரிசியை சேகரித்து அதற்கு பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டவர்.





பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட இவர் கட்டானா மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களில் சட்டவிரோதமாக பணம் சேகரித்து மக்களை பீதியடையச் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now