New Updates! Fresh news just arrived.

வெலேகொட முஸ்லிம் வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா ஏ...

News

வெலேகொட முஸ்லிம் வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்

October 25, 2026 2:15 pm
வெலேகொட முஸ்லிம் வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்
மேமா/கள/வெலேகொட முஸ்லிம் வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு பவள விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் பாடசாலை அதிபர் சுதர்சன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள இப்பவள விழாவைச் சிறப்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு செயற்றிட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, எதிர்வரும் ஜனவரி மாதம் பவள விழாவை வெகுவிமரிசையாக நடத்துவதுடன், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு கலை, கலாசார மற்றும் கல்விசார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கலந்துரையாடலில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

பவள விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான புதிய சீருடை அங்கங்களான கழுத்துப்பட்டி (Tie) மற்றும் மாணவிகளுக்கான முன்தானை ஆகியன அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. அவற்றைப் பாடசாலை அதிபர் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இதன்போது, மாணவர்களுக்கான கழுத்துப்பட்டியைப் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவரும், மாணவிகளுக்கான முன்தானையைப் பழைய மாணவியர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பாடசாலையின் 75 ஆண்டுகால கல்விப் பயணத்தையும் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் இப்பவள விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் பழைய மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டுள்ளன.

பவள விழா மூலம் பாடசாலையின் வரலாறு, கல்வி வளர்ச்சி, மாணவர்களின் திறமைகள் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கும், பாடசாலைச் சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கும் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now