நிலச்சரிவுகளை ஆய்வு செய்ய 7,779 கோரிக்கைகள்: தேசிய கட்டிட...
News
நிலச்சரிவுகளை ஆய்வு செய்ய 7,779 கோரிக்கைகள்: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!
டித்தவா புயலைத் தொடர்ந்து நிலச்சரிவு அபாயங்களை ஆய்வு செய்ய, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 7,779 கோரிக்கைகளைப் பெற்றுள்ளது.
குறித்த கோரிக்கைகள் தொடர்பான இடங்கள் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை 51,990 என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை 11,020 இடங்களும், அந்த இடங்களில் உள்ள 48,748 வீடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு அபாயங்கள் தொடர்பான அதிகபட்ச புகார்கள் மாத்தளை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன. புகார்களின் எண்ணிக்கை 1,639 ஆகும். நுவரெலியா மாவட்டத்திலிருந்து 1,392 புகார்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 1,248 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
அதிக அபாயம் உள்ள நிலச்சரிவுப் பகுதிகளில் 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
மேலும், இந்தக் குடும்பங்களில் சுமார் 5,000 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.