New Updates! Fresh news just arrived.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு! - Gur...

News

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!

October 22, 2026 12:14 pm
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!
தற்போது பெய்து வருகின்ற கன மழையின் காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தினுடைய 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவுக்கு திறந்து விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற கன மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாகவும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

இதன்படி, குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக இன்று அதிகாலை வரைக்கும் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டதாகவும், அதில் ஒரு வான் கதவு (22) அதிகாலை தானாகவே மூடிக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தினால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் தானாகவே திறக்கக்கூடும் என்பதினால், நீர்த்தேக்க அணைக்கு கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவினுடைய இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்தோடு இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கோரியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now