உறவுக்கார இளைஞரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 8 வயத...
News
உறவுக்கார இளைஞரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!
யாழில் 8 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியிலேயே குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
தாய்வழி உறவினரான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
பு.கஜிந்தன்