ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆண்டுகள் நிறைவு – இன்று விசேட...
News
ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆண்டுகள் நிறைவு – இன்று விசேட நிகழ்வு!
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆரம்பிக்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, இன்று காலை 9.00 மணிக்கு பிட்டக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறி கொத்தவில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, 1946ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி கொழும்பில் உள்ள ‘பாம் கோர்ட்’ மாளிகையில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.
கட்சியின் ஆரம்பகால தலைவராக டி.எஸ். சேனாநாயகவும், செயலாளராக எச்.டபிள்யூ. அமரசூரியவும் தெரிவு செய்யப்பட்டனர். சேர் ராசிக் பரீட் மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோர் இணைப் பொருளாளர்களாக பொறுப்பேற்றனர்.
அதேவேளை, கட்சிக்கான அடையாளமாக பச்சை நிறமும், சின்னமாக யானையும் தெரிவு செய்யப்பட்டன.
கட்சி தோற்றம் பெற்றது முதல் அதன் தலைமைப் பொறுப்பை டி.எஸ். சேனாநாயக, டட்லி சேனாநாயக, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் வகித்துள்ளனர்.
ரணசிங்க பிரேமதாசவின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கப்பட்டதுடன், அவர் தொடர்ந்து அந்தப் பொறுப்பை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.