9 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவ...
News
9 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
கடந்த 22 ஆம் திகதி மாலை
இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்ற நீதவான் நேற்று (23) உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி காலை மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் கடந்த 22 ஆம் திகதி மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்ததால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்று காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.