New Updates! Fresh news just arrived.

நாட்டில் 9 லட்சம் சிம்கள் முடக்கப்படும் அபாயம் - பொதுமக்க...

News

நாட்டில் 9 லட்சம் சிம்கள் முடக்கப்படும் அபாயம் - பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

February 21, 2026 3:03 pm
நாட்டில் 9 லட்சம் சிம்கள் முடக்கப்படும் அபாயம் - பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு
நாட்டில் சரியான அடையாள விவரங்கள் இல்லாத சுமார் 9 இலட்சம் மொபைல் சிம்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்,

மேலும் மொத்தம் 897,802 சிம்கள் முறையான அடையாள சரிபார்ப்பின்றி செயல்பட்டு வருகின்றன. தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், இவ்வகை சிம் கார்டுகள் செயலிழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தற்போது 245,811 வணிக சிம்களும் பயன்பாட்டில் உள்ளன. பதிவு செய்யப்படாத சில சிம் கார்டுகள் பெரிய அளவிலான கொள்ளைகள் உள்ளிட்ட கடுமையான குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிம் பதிவு கட்டமைப்பில் இருந்த குறைபாடுகளை சரிசெய்து, பதிவு நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

விசாரணைகளுக்கு காவல்துறைக்கு துல்லியமான தகவல்கள் அவசியம் என்றும், சரிபார்க்கப்படாத சிம் கார்டுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, பதிவு விவரங்கள் முழுமையற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தும் நபர்கள் உடனடியாக தேவையான அடையாள தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இணங்கத் தவறினால், அந்த சிம் கார்டுகள் செயலிழக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குற்றங்களை கட்டுப்படுத்தவும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now