New Updates! Fresh news just arrived.

செம்மணி அகழ்வில் மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு ...

News

செம்மணி அகழ்வில் மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

August 11, 2026 6:44 am
செம்மணி அகழ்வில் மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று (திங்கட்கிழமை) 102ஆவது நாளை எட்டியுள்ளன.

நேற்றைய அகழ்வுப் பணிகளின்போது புதிதாக 9 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது.

அவற்றில் 513 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு 56 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அதன் 48ஆவது நாள் அகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும், முன்னதாக அடையாளம் காணப்பட்ட 7 எலும்புக்கூடுகளும் மேலதிக பரிசோதனைகளுக்காக நேற்று மீட்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகளின் போது முக்கிய சான்றுப் பொருட்கள் சிலவும் கிடைத்துள்ளன. அவற்றில் மாட்டின் காலில் பொருத்தப்படும் லாடம் ஒன்றும், கைவளையல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now