95 பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சிவப்பு அறிவி...
News
95 பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சிவப்பு எச்சரிக்கை மூலம் 10 சந்தேக நபர்களும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வருபவர்கள் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாகவே இன்று ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் தூதரகங்களின் உதவியுடன் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பல கொலைச் சம்பங்களுடன் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளரென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.