அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது!
News

அம்பாறை மாவட்டத்தின், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் 07 பகுதியில், 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனக் கூறப்படும் போதைப்பொருளோடு 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுளள்தாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கையின்போது குறித்த நபரிடம் இருந்து 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியினுடைய தலைமையிலான குழுவால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தில்சாத் பர்வீஸ்