மின் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இம்மாதம் அறிவிக்கப்ப...
News
மின் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இம்மாதம் அறிவிக்கப்படும்: பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!
மின் கட்டண திருத்தம் குறித்த முடிவு இந்த மாதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தினை உயர்த்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு குறித்த மேற்கு மாகாணத்தின் கருத்துக்களும் ஆலோசனைகளுமானது இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் பெறப்பட்டதுடன், குறித்த முன்மொழிவு மீதான பொது கலந்தாய்வானது நிறைவடைந்தது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு மின் கட்டணத்தை 13.56 சதவீதம் உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தமாய் குறிப்பிடத்தக்கது.