New Updates! Fresh news just arrived.

ஈரானுக்குத் தகுந்த பதிலடி: வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வம...

News

ஈரானுக்குத் தகுந்த பதிலடி: வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

March 2, 2026 9:47 am
ஈரானுக்குத் தகுந்த பதிலடி: வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டறிக்கையிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டறிக்கையில் வளைகுடா நாடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"பிராந்தியத்தில் பதற்றத்தைத்தினை தணிப்பதற்காகப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களினை நடத்தி வருகின்றது. எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை விடயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. ஈரானின் இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் இந்தத் திடீர் அறிவிப்பு பிராந்திய நிலைமையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now