New Updates! Fresh news just arrived.

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை: பலரது கண்களில் பார்வ...

News

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை: பலரது கண்களில் பார்வை பிரச்சினை!

August 21, 2026 3:19 pm
யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை: பலரது கண்களில் பார்வை பிரச்சினை!
யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் அதிகளவான ஒளி பயன்படுத்தப்பட்டதால் பலரது கண்கள் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆலயத்தின் வளாகமானது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதில் அலங்கரிக்கப்பட்டிருந்த பார்வைக்கு ஆரோக்கியமற்ற மின் விளக்குகளினால் இதுவரைக்கும் ஏறக்குறைய 35 பேருக்கு கண் பார்வை பிரச்சினை இன்று காலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

மேலும், குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்றவர்களை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று கண் பரிசோதனை செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now