திரையரங்கிலிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான தோட்டாக்கள்,...
News
திரையரங்கிலிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான தோட்டாக்கள், துப்பாக்கிகள்: ஒருவர் கைது!
கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்திருக்கின்ற திரையரங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளோடு சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, நேற்று (17) மாலை கொழும்பு மாவட்டத்தின் குற்றத்தடுப்புப் பிரிவினுடைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையின் போதே குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, மில்லத்தே பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த திரையரங்கிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு போர் 12 துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி,மற்றும் போர் 16 ரக தோட்டாக்கள் 278, போர் 12 ரக தோட்டாக்கள் 398 மற்றும் பொயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.