வங்கக்கடலில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக வாய்ப்பு! - Gu...
News
வங்கக்கடலில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாக வாய்ப்பு!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பகுதியில் நாளை (13) குறைந்த அழுத்த மண்டலம் ஒன்று உருவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்ளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இன்று (12) காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும். எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அப்பகுதிகளில் மணி நேரத்திற்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.