அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது!
News
அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது!
அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தோடு, தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தினுடைய சாரதியே, அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் தற்போதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதன்படி, கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதிகட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும்,கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனமானது, வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் எட்டு வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மேலும், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அக்குறணைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.