New Updates! Fresh news just arrived.

தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த புதிய குழ...

News

தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த புதிய குழு!

November 17, 2026 5:21 pm
தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்த புதிய குழு!
இலங்கையின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 'தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு' ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இந்த புதிய குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அணுசக்தி மற்றும் ஏனைய கதிர்வீச்சுப் பொருட்கள், அவற்றுடன் தொடர்புடைய வசதிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இடம்பெறக்கூடிய அங்கீகரிக்கப்படாத அல்லது குற்றச் செயல்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு உரிய முறையில் பதிலளித்தல் போன்றனவே இந்தக் குழு உருவாக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளரின் தலைமையில் இயங்கவுள்ள இந்தக் குழுவின் செயலாளராக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் பணிப்பாளர் நாயகம் செயற்படவுள்ளார்.

அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான கொள்கை ஒருங்கிணைப்பு, அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றுக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்காக ஒரு நிலையான மத்திய பொறிமுறையாக இந்தக் குழு செயற்படவுள்ளது.

இது தொடர்பான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now