உயர்தர பரீட்சை குறித்து புதிய சர்ச்சை; நீதிமன்றம் செல்லப்...
News
உயர்தர பரீட்சை குறித்து புதிய சர்ச்சை; நீதிமன்றம் செல்லப்போவதாக எச்சரிக்கை!
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
ஒகஸ்ட் 10ஆம் திகதி பரீட்சை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முந்தைய பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு தயாராகும் காலம் மிகவும் குறுகியதாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர்களின் கற்றல் மற்றும் பரீட்சைத் தயாரிப்பு காலம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மாணவர்களின் சமத்துவ உரிமை பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, உயர்தர பரீட்சை அட்டவணையை மீளாய்வு செய்து உரிய தீர்மானம் எடுக்குமாறு அரசாங்கத்திற்கும் கல்வி அமைச்சிற்கும் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.