மத்திய கிழக்கில் புதிய திருப்பம்; ஈரானுடன் ட்ரம்ப் கையெழு...
News
மத்திய கிழக்கில் புதிய திருப்பம்; ஈரானுடன் ட்ரம்ப் கையெழுத்திட்ட முக்கிய ஒப்பந்தம்!
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி7 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளியான செய்தியை அமெரிக்க அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Esmail Baghaei உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்ற நிலையை தணிக்கும் முக்கிய நகர்வாகக் கருதப்படுவதுடன், உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.