உலகக் கிண்ணப் போட்டியை இலவசமாகப் பார்க்க அரிய வாய்ப்பு - ...
News
உலகக் கிண்ணப் போட்டியை இலவசமாகப் பார்க்க அரிய வாய்ப்பு
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டி இன்று (18) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி மைதானத்தின் 5 மற்றும் 7 ஆம் இலக்க வாயில்கள் ஊடாகப் பொதுமக்கள் நுழைந்து போட்டியை இலவசமாகப் பார்வையிடமுடியும்.
சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற பாகிஸ்தான் அணிக்குக் குறித்த போட்டி மிகவும் தீர்மானமிக்கதாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் 5ஆவது மற்றும் இறுதிப் போட்டி இதுவாகும்.