New Updates! Fresh news just arrived.

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தனி ஆணைக்குழு அவச...

News

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தனி ஆணைக்குழு அவசியம்!

November 4, 2026 6:59 pm
மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தனி ஆணைக்குழு அவசியம்!
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் படிப்படியாகப் பல உரிமைகளைப் பெற்றிருந்தாலும், மலையக மக்கள் இன்றும் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலையக மக்களின் கல்வி, வாழ்வாதாரம், குடியுரிமை, வறுமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் விரிவாக ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக மலையக மக்களுக்கெனத் தனியான ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகால அரசாங்கங்கள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கமாவது இவ்வாணைக்குழுவை அமைத்து, மலையக மக்களும் ஏனைய சமூகங்களுக்கு இணையாக சம உரிமையுடனும் சமமான வாழ்வாதாரத்துடனும் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now