New Updates! Fresh news just arrived.

கச்சா எண்ணெய் விலையில் சற்று வீழ்ச்சி

News

கச்சா எண்ணெய் விலையில் சற்று வீழ்ச்சி

October 13, 2026 9:39 am
கச்சா எண்ணெய் விலையில் சற்று வீழ்ச்சி
சவூதி அரேபியாவின் மீதான தாக்குதலால் ஏற்பட்ட விநியோக அபாயங்களை வர்த்தகர்கள் மதிப்பீடு செய்த வேளையில், ரஷ்யாவிடம் இருந்து மேலதிக டீசல் விநியோகம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கருத்திற் கொண்டதால், பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 2 அமெரிக்க டொலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெயின் விலையானது இன்று அதிகாலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 0.57% குறைந்து ஒரு பீப்பாய்க்கு 106.04 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WST) கச்சா எண்ணெயின் விலையானது 0.5% குறைந்து ஒரு பீப்பாய்க்கு 93.27 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.

செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விலையாக, திங்கட்கிழமை பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 106.65 என்ற விலையில் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைகளுக்குத் டீசல் வழங்க ரஷ்யா சம்மதித்து உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு எதிரான போருக்கான வருவாயை மொஸ்கோ ஈட்டுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டு இருந்த ரஷ்ய எரிபொருள் மீதான அமெரிக்கத் தடையை அவரது நிர்வாகம் தற்காலிகமாகவும் நீக்கியுள்ளது.

மேலதிக விநியோகங்கள், உலகளாவிய எரிபொருள் சந்தைகளில் உள்ள பற்றாக்குறையைக் குறைக்கவும், சமீபத்தில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வந்த விநியோகக் கவலைகளைத் தணிக்கவும் இது உதவ கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வரும் வரை ரஷ்ய எரிபொருள் இறக்குமதியைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டத்தினை, ட்ரம்ப் - புட்டினுடன் செய்துகொண்ட இந்த ஒப்பந்தம் மீறுவதாகத் தோன்றுவதாக அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now