பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் ஹெரோயினுடன் க...
News
பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது!
யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்திற்கருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த கைப்பையொன்று களவாடப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், தெல்லிப்பழை பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரினை சுன்னாகப் பொலிசார் நேற்றையதினம் கைது செய்தனர். இதன் அடிப்படையில் அவரிடமிருந்து 5 கைபேசிகள், ஒரு தொகை பணம் மற்றும் 2 கிராம் 820 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, மீட்கப்பட்ட கைபே்பேசிகளில் 3 கைபேசிகளானது மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் திருடப்பட்டுள்ளதாகவும் அவை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, விவோ மற்றும் ரெட்மி ஆகிய கைபேசிகள் யாருடையது என்று தெரியவராத நிலையில் அதன் உரிமையாளர்கள் அடையாளத்தினை காண்பித்து தமது பொருட்களினை பெற்றுச் செல்ல முடியும் எனவும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் முற்படுத்துவதற்கான நடவடிக்கைக;ளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்