இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
News
இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
லாகூரில் நடைபெறும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
அதன்படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பென் டக்கெட் (Ben Duckett) மற்றும் டொம் பான்டன் (Tom Banton) ஆகியோர் அபாரமான தொடக்கத்தை அளித்தனர்.
டொம் பான்டன் 75 பந்துகளில் 74 ஓட்டங்களையும் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 132 பந்துகளில் 167 ஓட்டங்களையும் (4 பவுண்டரிகள்) பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் (Harry Brook) 44 ஓட்டங்களையும், வில் ஜேக்ஸ் (Will Jacks) 30 ஓட்டங்களையும், ஜோர்டான் கொக்ஸ் (Jordan Cox) 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சாம் கரண் (Sam Curran) 21 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், துஷான் ஷானக்க, டில்ஷான் மதுஷங்க மற்றும் எஷான் மாலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதற்கமைய, இலங்கை அணி வெற்றி பெற 387 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.