New Updates! Fresh news just arrived.

சென்னை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - Gur...

News

சென்னை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

October 11, 2026 2:00 pm
சென்னை வந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இந்திய பிரதமர் மோடி இன்று சென்னையை வந்தடைந்தார்.

அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை 10.58 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியை விமான நிலையம் சென்று நேரில் வரவேற்றதோடு பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து பாரத ஜனாதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பேரணியாக சென்றார்.

அதன்போது வீதியின் இருபுறமும் கூடியிருந்து வரவேற்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி காரில் நின்றபடி கை அசைத்தார்.

தமிழக பா.ஜா.க சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் பிரதமர் மோடியின் வாகனத்துக்கு பின்னால் முதலமைச்சர் விஜய் காரில் பின்தொடர்ந்து சென்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now