ஆறுகம்பேயில் "சன்செட் வியூ பார்க்" திட்டம் ஆரம்...
News
ஆறுகம்பேயில் "சன்செட் வியூ பார்க்" திட்டம் ஆரம்பம்: அமைச்சர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்!
உலகப் புகழ்பெற்ற ஆறுகம்பே சுற்றுலாப் பிராந்தியத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் “சன்செட் வியூ பார்க்” (Sunset View Park) தகவல் மற்றும் சேவை மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஆறுகம்பே பாலத்திற்கு அருகில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பல ஆண்டுகளாக உரிய முன்னுரிமை வழங்கப்படாமல் தாமதமடைந்திருந்த இப்பிராந்தியத்தின் அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படும் இத்திட்டத்திற்காக, சுற்றுலாத்துறை அமைச்சினால் முழுமையான நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச தரத்திலான சுற்றுலா மையம்
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரும் பேராசிரியருமான ருவன் ரணசிங்கவினுடைய தலையீட்டுடனும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் தலைமைத்துவ ஒருங்கிணைப்பிலும் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆறுகம்பே பிராந்தியத்தை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் இத்திட்டம் ஒரு முக்கிய ஆரம்பக் கட்டமாகக் கருதப்படுகிறது.
அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் இணைந்து இத்திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விரைவாக நிறைவுசெய்து, பிரதேச மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயன்படும் வகையில் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்