New Updates! Fresh news just arrived.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்குத் தலைவராக மீராலெவ்வை அ...

News

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்குத் தலைவராக மீராலெவ்வை அப்துல் மஜீட் தெரிவு!

October 24, 2026 5:52 pm
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்குத் தலைவராக மீராலெவ்வை அப்துல் மஜீட் தெரிவு!
சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இன்று (24) சனிக்கிழமை நடைபெற்ற பொதுச்சபைத் தேர்தலில், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் புதிய உறுப்பினர்களாக 11 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில், மொத்தம் 225 பேர் வாக்களித்தனர்.

இதன்போது, நம்பிக்கையாளர் சபையினுடைய தலைவராக மீராலெவ்வை அப்துல் மஜீட், உப தலைவராக முகம்மது இஸ்மாயில் முகம்மது கலீல் மற்றும் செயலாளராக முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸ்ஹாக், உப செயலாளராக அகமதுலெவ்வை றஸ்மின் மற்றும் பொருளாளராக முகம்மது முஸ்தபா நௌசாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களின் விபரங்கள் வருமாறு:

1. முகம்மது யாசீன் அஹ்மத் ஜலீல்

2. ஆதம்லெவ்வை முகம்மது சாஜித் அலி

3. மீராலெல்வை அப்துல் றஹீம்

4. சுலைமாலெவ்வை முஹம்மது றுவைஸ்தீன்

5. கோஸ் முகம்மது முகைதீன்பாவா

6. அஹமட் முஹம்மட் நுஸ்கி அஹமட்

7. சீனி முகம்மது முகம்மட் முஸ்தபா

8. மீராசாஹிப் அப்துல் மஜீது

9. சின்னத்தம்பி அப்துல் சலாம் (எஸ்.டி. நிஸார்)

10. அப்துல் ஹமீட் முஹம்மட் புஆத்

11. அப்துல் அமீது ஜெமீல்

12 முஹம்மது மக்கீன் பஹ்மி மக்கீன்

13. பீர் முஹம்மட் மீரா முகைதீன் (றியாழ்)

14. மீரா முகைதீன் முகம்மட் அலி


மேலும், குடிமரைக்கார் சார்பாக எஸ். மஃறுப் ஆதம், ஜம்மியத்துல் உலமா சார்பில் மௌலவி அப்துல் றஹீம் ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தெரிவில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ. சுபைதீன், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர் யு.எல். றிபாஜ், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.ஏ.ஏ. அஸீம், சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் எஸ்.எப். இன்ஷானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் அமீர் ஐ. அப்துல் ஜப்பார், தவிசாளர் டாக்டர் ஏ.எம்.எம்.ஏ. றஷீட், பொதுச் செயலாளர் ஏ. முஹம்மட் இல்யாஸ் மற்றும் செயலாளர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் ஆகியோரும் இத்தெரிவில் பங்கேற்றனர்.

இதற்கு முன்னதாக, சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் ஏற்பாட்டில் எட்டு பள்ளிவாசல் வலயங்களுக்கான நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (23) வெள்ளிக்கிழமை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தில்சாத் பர்வீஸ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now