New Updates! Fresh news just arrived.

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி!

News

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி!

January 18, 2026 10:57 am
ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி!
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்திருந்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தினுடைய சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த நிலையில், சாரதி ஆசனத்திற்கு அருகில் உள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது.

அந்த நேரத்தில் சாரதி அக் கதவினை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்தினுடைய நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டத்தோடு,, குறித்த தடையினை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now