New Updates! Fresh news just arrived.

நுவரெலியா - தலவாக்கலை வீதியில் விபத்து: 28 பேர் வைத்தியசா...

News

நுவரெலியா - தலவாக்கலை வீதியில் விபத்து: 28 பேர் வைத்தியசாலையில்

November 14, 2026 12:34 pm
நுவரெலியா - தலவாக்கலை வீதியில் விபத்து: 28 பேர் வைத்தியசாலையில்
நுவரெலியா - தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14) முற்பகல் 11.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தொன்றும், எதிர் திசையில் நுவரெலியாவிலிருந்து அக்கரபத்தனை நோக்கிப் பயணித்த பேருந்தொன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now