New Updates! Fresh news just arrived.

ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது! -...

News

ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது!

June 26, 2026 4:47 pm
ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது!
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பிலான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிலையில், அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தினை விடவும் இம்முறை முடிந்தளவில் சிரமங்களினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு நாடுகளிலிருந்தும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்களினை இம்முறை யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

பெருந்திரளான மக்கள் செல்வத்தினால், அங்கு அதனை முகாமைத்துவம் செய்வதில் சில சிரமங்கள் இருப்பதினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.எனினும் அவற்றினை இயலுமான வரையில் குறைப்பதற்கே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் இம்முறை மேற்கொண்ட ஹஜ் யாத்திரை குறித்து முழுமையான அறிக்கையொன்று தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியதோடு, குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் கவனம் செலுத்தி இனிவரும் காலத்தில் தேவையான நடவடிக்கைகளினை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விடயத்தினை மேலதிக குழுவொன்றினை நியமித்து ஆராய்வது தொடர்பிலான தீர்மானத்தை எடுப்பதா? இல்லையா? என்பது குறித்தும் கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னரே எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now