அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளி சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக...
News
அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளி சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்கள் தாக்கப்படுவதாக வெளியாகியுள்ள காணொளிகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிய தாக்குதல் காட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஆணைக்குழு அதிகாரிகள், சீர்திருத்தப் பள்ளிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.