பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக...
News
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை
பொதுப் போக்குவரத்து பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் இறக்கிவிடும் இடங்களில் பிற வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
பேருந்து நிறுத்தப் பகுதிகள் மறைக்கப்படுவதால், பேருந்துகளை வீதியின் நடுப்பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் பயணிகளுக்கான பாதுகாப்பு பிரச்சினைகளும் உருவாகுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி பயணிக்கக்கூடிய பேருந்து சேவைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து நிறுத்தங்களை தடையின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் வைத்திருப்பது அவசியம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்களை பிற வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி ஏனைய பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் சிரமங்களையும் பாதுகாப்பு அபாயங்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பேருந்து நிறுத்தங்களைச் சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கான புதிய கட்டுப்பாடுகள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் செல்லும் திசையில் அதற்கு 30 மீற்றர் வரையிலான பகுதிக்குள்ளும், பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியேறும் திசையில் 15 மீற்றர் வரையிலான பகுதியிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தத்திற்கான தனிப்பகுதி(Bus Bay) வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்களில், அணுகும் திசையில் 15 மீற்றர் வரையிலும், வெளியேறும் திசையில் 10 மீற்றர் வரையிலும் பிற வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கான சூழலை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.