New Updates! Fresh news just arrived.

அரச நிறுவனங்களின் நடைமுறைக்கு வரும் அதிரடி திட்டம்

News

அரச நிறுவனங்களின் நடைமுறைக்கு வரும் அதிரடி திட்டம்

March 15, 2026 10:06 am
அரச நிறுவனங்களின் நடைமுறைக்கு வரும் அதிரடி திட்டம்
அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக புதிய விசாரணை அதிகாரிகளின் குழுவொன்றை (Investigative Officers Pool) அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகக் கோரப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதியான 150 அதிகாரிகள் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டு இந்த விசேட குழுவில் இணைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட இந்த 150 அதிகாரிகளும் தலா 50 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 14 நாட்கள் கொண்ட விசேட பயிற்சித் திட்டங்களுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அரச சேவைக்குள் முறையான பயிற்சி பெற்ற விசாரணை அதிகாரிகளை உருவாக்குவதும், வெளி நிறுவனங்களில் இருந்து அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வரும் கோரிக்கைகளைத் திறம்படக் கையாளுவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் அரச நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now