New Updates! Fresh news just arrived.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!

News

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!

October 1, 2026 7:01 am
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!
சிறுவர்களை அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளில் இருந்து பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சிறுவருக்கும் கல்வி, சுகாதாரம், போஷாக்கு, சமூகப் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களின் பாதுகாப்பான வளர்ச்சியை உறுதி செய்வதுடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள தேவையான சூழலை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிள்ளைகளுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கும் நோக்கில் கல்வித்துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், போதைப்பொருளில் இருந்து இளம் தலைமுறையைப் பாதுகாக்க தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now