New Updates! Fresh news just arrived.

சுகாதார அமைச்சுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ...

News

சுகாதார அமைச்சுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

September 6, 2026 5:11 pm
சுகாதார அமைச்சுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!
புதிய தொழில்நுட்ப உபகரணங்களை நாட்டின் சுகாதார அமைப்பில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி உயிரியல் தொழில்நுட்பத் தலைவர்கள் குழுவினர், சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனியை சந்தித்த போதே, இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை பலப்படுத்துவதற்கும், தற்போதைய சுகாதார சவாலாக விளங்கும் தொற்றா நோய்களைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்கும் தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now