மனநலச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை!
News

இலங்கையின் மனநலச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார்.
தேசிய மனநல நிறுவனத்தின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது அவர் குறித்த கருத்தை வெளியிட்டார்.
நாட்டின் மனநலச் சேவை சரியான திருப்புமுனையில் உள்ளது என்றும், தற்போதுள்ள மனநலச் சட்டம் இப்போது நூறு ஆண்டுகள் பழமையானது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, சட்டத்தைப் புதுப்பிக்கும் செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், புதிய மனநலச் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு சவாலான பணியாக இருந்தாலும், முன்மொழியப்பட்ட சட்டத்தின் ஆரம்ப வரைவு ஏற்கனவே பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் பிறகு புதிய சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தைப் பெற அனுப்பப்படும் என்றும் பிரதி அமைச்சர் மருத்துவர் விஜேமுனி மேலும் வலியுறுத்தினார்.