New Updates! Fresh news just arrived.

319 ஏக்கர் விவசாயக் காணிகளை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை! -...

News

319 ஏக்கர் விவசாயக் காணிகளை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை!

October 18, 2026 6:41 pm
319 ஏக்கர் விவசாயக் காணிகளை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை!
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள உரிமைப் பத்திரங்களைக் கொண்ட 319 ஏக்கர் விவசாயக் காணிகளை மீளப் பெறுவதற்காக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழிவு சமர்ப்பித்தார்.

இதற்கமைய இக்காணிகள் தொடர்பான விபரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் லால் காந்த அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பையை வளத்தாப்பிட்டி காணி இழந்த உரிமையாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் (கல்முனை) இன்று (18) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன் கலந்து கொண்டார்.

கே.எ.ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now