New Updates! Fresh news just arrived.

வடக்கு சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய நடிகை நமீதா விருப...

News

வடக்கு சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய நடிகை நமீதா விருப்பம்!

October 5, 2026 11:52 am
வடக்கு சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய நடிகை நமீதா விருப்பம்!
இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி - நமீதா தம்பதிகள், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு வருகை வந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் நேற்று (04) நண்பகலில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன்,இந்திய திரைப்பட நடிகை நமீதா மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரி, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினுடைய பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், வீரேந்திர சவுத்திரி- நமீதா குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now