New Updates! Fresh news just arrived.

அக்குரேகொடை இரட்டை கொலை: துப்பாக்கிதாரி அடையாளம்!

News

அக்குரேகொடை இரட்டை கொலை: துப்பாக்கிதாரி அடையாளம்!

February 20, 2026 1:37 pm
அக்குரேகொடை இரட்டை கொலை: துப்பாக்கிதாரி அடையாளம்!
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஆனந்த விஜேபால குறித்த விடயத்தினை இன்று (20) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சந்தேகநபர்களினை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுபிடிக்கப்பட்டது. குற்றத்திற்காக துப்பாக்கிகளைளினை வழங்க வந்த வாகனத்தினை கொட்டாவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குற்றத்தினை செய்வதற்கு முன்னர் தங்கியிருந்த இடத்திற்கு அவர்களினை அழைத்துச் சென்ற வாகனத்தினை கைப்பற்றுவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன, அதன் உரிமையாளர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேபோல், இந்த குற்றத்தைச் புரிவதற்காக கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேக நபர், இலக்கம் 102/9, விகாரை வீதி, மீவல, ருக்கஹவெல பகுதியைச் சேர்ந்த ரூபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்ற வாகனத்தின் உரிமையாளர், காலி பகுதியைச் சேர்ந்த வன்னி ஆரச்சிகே சிஹின தில்சர எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குறித்த சந்தேக நபரினையும் குறித்த வாகனத்தினையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now