அக்குரேகொட இரட்டைக்கொலை: விசாரணைகளில் 80% நிறைவு!
News

அக்குரேகொட இரட்டைக்கொலையோடு, தொடர்புடைய விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான ஏ.எஸ்.பி. எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்,
அமைச்சரவை முடிவுகளினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அக்குரேகொட பகுதியிலுள்ள பல்பொருள் அங்கொடியொன்றின் வாகன நிறுத்தும் இடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் 80 வீதமானவை தற்போது நிறைவடைந்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த துயரச் சம்பவத்தினை அடுத்து, மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரியுட்பட ஐந்து சந்தேகநபர்களினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஏனைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களினை கைது செய்ய 12 காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மேலதிக முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.