New Updates! Fresh news just arrived.

கல்முனை நகர மண்டபத்தை பொது மக்கள் பாவனைக்கு கொண்டு வர ஆதம...

News

கல்முனை நகர மண்டபத்தை பொது மக்கள் பாவனைக்கு கொண்டு வர ஆதம்பாவா எம்.பி நடவடிக்கை!

July 16, 2026 7:35 pm
கல்முனை நகர மண்டபத்தை பொது மக்கள் பாவனைக்கு கொண்டு வர ஆதம்பாவா எம்.பி நடவடிக்கை!
கல்முனை மாநகர சபையின் பராமரிப்பில் உள்ள கல்முனை நகர மண்டபத்தில் தற்போது தேசிய தொழில் பழகுநர் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபை அலுவலகம் இயங்கி வருகிறது இதனை வேறு இடத்தில் மாற்றம் செய்து கல்முனை நகர மண்டத்தை விரைவில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரும் முகமாக இதன் நடவடிக்கைகளை ஆராயும் முகமாக இன்று (16) வியாழக்கிழமை கல்முனை அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கல்முனை நகர மண்டபத் துக்கு விஜயம் செய்தார்.

இதன் போது தேசிய தொழில் பழகுநர் மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையை தற்காலிகமாக கல்முனை மாநகர சபையின் பழைய கட்டிடத்தில் இயங்க வைக்கும் முகமாக அதன் சாத்திய நிலை தொடர்பில் கல்முனை மாநகர சபை பழைய கட்டிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் மா நகர சபை அதிகாரிகள் பிரஜா சக்தி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

மிக விரைவில் கல்முனை நகர மண்டபம் பொது மக்கள் பாவனைக்கு கல்முனை அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் முயற்சியின் பலனாக வர வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம். என். எம். அப்ராஸ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now