அகமதாபாத் - கொழும்பு நேரடி விமான சேவை: ஏப்ரல் மாதம் தொடக்...
News
அகமதாபாத் - கொழும்பு நேரடி விமான சேவை: ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பம்!
இந்தியாவினுடைய அகமதாபாத் நகரில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளினை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரான ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த விமான சேவைகளினை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இவ்வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக இலங்கையிலுள்ள பக்தர்கள் குஜராத் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்புக் கிடைக்கும்" என தெரிவித்தார்.