அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! - Gu...
News
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, அக்கரைப்பற்று பிரதேச செயலாளரான ரி.எம்.எம்.அன்சார் அவர்களினுடைய ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (27) அக்கரைப்பற்று பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், பொதுமக்களினுடைய அடிப்படை தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகச் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித் மாற்று அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைய தவிசாளர் எம். ஏ. ராசீக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், அக்கரைப்பற்று உள்ளூராட்சி சபைகளினுடைய உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் மற்றும் திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல் கட்சிகளினுடைய பிரமுகர்களும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தினுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளினை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நூருல் ஹுதா உமர்