அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிப் பிரமாண...
News
அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிப் பிரமாணம்!
அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய உறுப்பினராக திரு. முகம்மது அப்துல் காதர் அப்துல் ஹையு அவர்கள் உத்தியோகபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தேசிய காங்கிரஸின் தலைவரும், அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினருக்கான பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
திரு. முகம்மது அப்துல் காதர் அப்துல் ஹையு அவர்கள் தேசிய காங்கிரஸின் மூத்த செயற்பாட்டாளராகவும், கட்சியின் நீண்டகால விசுவாசியாகவும் அறியப்படுகிறார். மேலும், அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபராகப் பணியாற்றிய அவர், கல்வித்துறையிலும் சமூக சேவையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
புதிய உறுப்பினரின் நியமனம் அக்கரைப்பற்று மாநகரசபையின் அபிவிருத்திப் பணிகளுக்கும், மக்களின் நலன் சார்ந்த சேவைகளுக்கும் மேலும் வலுசேர்க்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாநகரசபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்கள், புதிய உறுப்பினரின் நீண்டகால சமூக அனுபவமும் கல்விசார் பங்களிப்பும் மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு பயனுள்ளதாக அமையும் எனத் தெரிவித்ததுடன், மக்கள் சேவையிலும் நகர அபிவிருத்திப் பணிகளிலும் சிறப்பாகச் செயலாற்ற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நூருல் ஹுதா உமர்